/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மறைமலை நகரில் ஆர்பாட்டம்
/
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மறைமலை நகரில் ஆர்பாட்டம்
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மறைமலை நகரில் ஆர்பாட்டம்
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மறைமலை நகரில் ஆர்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 07:50 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, பாவேந்தர் சாலையை சுற்றி 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், தேவாலயம், கோவில்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஆண்டு செப்., மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
டாஸ்மாக் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது முதலே பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது மட்டுமின்றி காலை முதலே கள்ளத்தளமாக மது விற்பனையும் தொடர்ந்து நடைபெற்றது.
குடிமகன்களால் பள்ளி மாணவர்கள், பெண்கள் தேவாலயம் செல்வோர் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பலர் இரவு நேரங்களில் தேவாலயம் முன் விழுந்து கிடக்கின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மறைமலைநகர் நகர செயலர் பாலாஜி தலைமையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50 மேற்பட்டவர்கள் பங்கேற்று, டாஸ்மாக் நிர்வாகத்திற்க்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

