/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரவு 12 மணி வரை பாதுகாப்பு வழங்குங்க பாலவாக்கம் கடற்கரையில் பெண்கள் அடம்
/
இரவு 12 மணி வரை பாதுகாப்பு வழங்குங்க பாலவாக்கம் கடற்கரையில் பெண்கள் அடம்
இரவு 12 மணி வரை பாதுகாப்பு வழங்குங்க பாலவாக்கம் கடற்கரையில் பெண்கள் அடம்
இரவு 12 மணி வரை பாதுகாப்பு வழங்குங்க பாலவாக்கம் கடற்கரையில் பெண்கள் அடம்
ADDED : ஏப் 14, 2025 11:55 PM
திருவான்மியூர்,பாலவாக்கத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள், மூன்று ஆண்கள் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர்.
இரவு 10:00 மணிக்கு மேல் கூட்டம் குறைந்துவிடும். ஆனால், கடற்கரையின் ஒரு பகுதியில், சில பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.
இரவு ரோந்து பணியில் இருந்த இசக்கிதுரை உள்ளிட்ட போலீசார், 10:45 மணிக்கு இருட்டான பகுதியில் நின்ற அவர்களை, அங்கிருந்து செல்ல வலியுறுத்தினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள், 'இரவு 12:00 மணி வரை நாங்கள் இங்கு தான் இருப்போம்; வி.ஐ.பி.,க்கள் வந்தால் மட்டும் பாதுகாப்பு வழங்குறீங்க. அதுபோல் எங்களுக்கும் போலீசார் நியமித்து, பாதுகாப்பு வழங்குங்கள்' என வாக்குவாதம் செய்தனர்.
போலீசார், 'வெளிச்சமான பகுதிக்கு செல்லுங்கள்' என்றனர். அதற்கு, 'இங்கு தான் நிற்போம்' என, அவர்கள் அடம் பிடித்தனர்.
போலீசாருக்கும், அவர்களுக்குமான வாக்குவாதம் 15 நிமிடங்கள் நீடித்தது. இதை, அப்பெண்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
கடற்கரையில் கூட்டம் குறைந்ததும், அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில், இருட்டான பகுதியில் ஆங்காங்கே நிற்கும் நபர்களை, அங்கிருந்து செல்ல வலியுறுத்துவது வழக்கம்.
இரவில் ஆமை முட்டையிட கரை ஒதுங்கும் பகுதியில், பொதுமக்கள் நிற்க அனுமதிப்பதில்லை.
நள்ளிரவில் இருட்டான பகுதியில் தனியாகவோ, ஜோடியாகவோ உலவ விடுவதில்லை. அடம் பிடித்தால், வெளிச்சமான பகுதிக்கோ, கண்காணிப்பு கேமரா உள்ள பகுதிக்கோ செல்ல வலியுறுத்துவோம்.
திருட்டு, வழிப்பறி, பாலியல் தொந்தரவு நடந்தால், எங்களைத் தான் குறை கூறுவர். எதற்காக இரவில் அப்புறப்படுத்துகிறோம் என புரிந்து கொள்ளாமல் சிலர் செயல்படுவது தான் வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.