/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதியோருக்கு பயனளிக்கும் உபகரணங்கள் வழங்கல்
/
முதியோருக்கு பயனளிக்கும் உபகரணங்கள் வழங்கல்
ADDED : நவ 24, 2024 09:23 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுதாமூர் ஊராட்சி, மருத்துவ நல மையத்தில், வயதான முதியோருக்கு இலவசமாக உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி,நடந்தது.
இதில், சென்னையின் குரோயிங் யங் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மற்றும் சிறுதாமூர் தனியார் அறக்கட்டளை இணைந்து, முதியோரின் உடல் மற்றும் மன ஆரோக்கிய நிகழ்ச்சிகளை நடத்தின.
பின், சிறுதாமூர், அனந்தமங்கலம், தின்னலுார், விண்ணம்பூண்டி மற்றும் மேட்டுப்பாளையம் கிராமங்களை சேர்ந்த, 37 முதியவர்களுக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், நடக்க உதவும் வாக்கர், முதுகுத்தண்டு பாதிப்படைந்தவர்களுக்கு மெத்தையுடன் கூடிய கட்டில்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், அச்சிறுபாக்கம் வட்டார மருத்துவர் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர், து.தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.