/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் மனு
/
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் மனு
ADDED : மே 15, 2025 09:17 PM
செங்கல்பட்டு:'செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் குறுவட்டத்தில் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, ஜமாபந்தி கூட்டத்தில், பொதுமக்கள் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு தாலுகாக அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி கூட்டம், கலால் உதவி கமிஷனர் மற்றும் தீர்வாய அலுவலர் ராஜன் பாபு தலைமையில், நேற்று நடந்தது.
தாசில்தார் ஆறுமுகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாலுார், ஆப்பூர் ஆகிய குறுவட்ட கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 180 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, தீர்வாய அலுவலர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, இன்று காட்டாங்கொளத்துார் குறுவட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
இந்த குறுவட்டங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள், தங்கள் பகுதி கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலம் என, வருவாய்த் துறையினர் தெரிவித்து உள்ளனர்.