/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்
/
கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்
கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்
கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்
ADDED : டிச 08, 2024 01:46 AM

கல்பாக்கம்:கல்பாக்கம் பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார கடற்கரை பகுதியில், அபாயம் உணராமல் பொதுமக்கள் உலவுகின்றனர்.
கல்பாக்கத்தில், வங்க கடலுடன், பகிங்ஹாம் கால்வாய் இணையும் முகத்துவாரம் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கடல்நீர் கால்வாய்க்கு வரும். பல மாதங்களாக, முகத்துவார பகுதியில் மணல் குவிந்து மேடாக இருந்தது.
மழையின்போது கால்வாயில் பெருக்கெடுக்கும் வெள்ளம், புதுப்பட்டினம் பகுதி கால்வாய் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.
இப்பாதிப்பை தடுக்க, முகத்துவார பகுதி மணல்மேடு அகற்றப்பட்டு, கால்வாய் வெள்ளம் கடலில் சேரும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டது. இதனால், முகத்துவார பகுதி அபாய பள்ளமாக உள்ளது.
இப்பகுதியில் அச்சமின்றி, பொதுமக்கள் உலவுகின்றனர். கரையில் நிற்பவரை அலை இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது. பலர் இறந்துள்ளனர். முகத்துவார கால்வாய் பகுதியில், பொதுமக்கள் உலவுவதை தடுக்க, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.