/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
/
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : மே 06, 2025 12:20 AM

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று வெளியிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், 20வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்.
அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறுநாகலுார், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் கரும்பாக்கம், லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் கொடூர், சித்தாமூர் தென்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் காலியாக உள்ளன.
மாவட்டத்தில், 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் மதுராந்தகம் நகராட்சியில், 19வது வார்டு கவுன்சிலர், மாமல்லபுரம் நகராட்சியில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிகள் காலியாக உள்ளன.
இப்பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வாக்காளர் பட்டியலை, செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில், கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டார்.
நகராட்சி கமிஷனர்கள் மதுராந்தகம் அபர்ணா, மாமல்லபுரம் கவின்மொழி ஆகியோர், பட்டியலை பெற்றுக் கொண்டனர். கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, தி.மு.க., சார்பில், நகர செயலர் குமார், அ.தி.மு.க., சார்பில், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், ஊரக உள்ளாட்சி அமைப்பில், 30,265 வாக்காளர்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் 2,263 வாக்காளர்கள் என, மொத்தம் 32,528 வாக்காளர்கள் உள்ளனர்.