/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டுமனைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சாலை அமைக்க புதுப்பட்டில் எதிர்ப்பு
/
வீட்டுமனைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சாலை அமைக்க புதுப்பட்டில் எதிர்ப்பு
வீட்டுமனைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சாலை அமைக்க புதுப்பட்டில் எதிர்ப்பு
வீட்டுமனைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சாலை அமைக்க புதுப்பட்டில் எதிர்ப்பு
ADDED : செப் 18, 2025 01:35 AM
செய்யூர்:புதுப்பட்டு கிராமத்தில், வீட்டுமனைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சாலை அமைக்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யூர் அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள், பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் சிரமப்பட்டு வந்ததால், அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், தனக்குச் சொந்தமான 3.09 ஏக்கர் நிலத்தை, வீடுமனை இல்லாத 75 ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனைகளாக பிரித்து வழங்க, 2009ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைத்தார்.
அந்த இடம் தற்போது வரை, அந்த மக்களுக்கு பிரித்து வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அருகே உள்ள இரணியசித்தி கிராமத்தில், மலைக்காலனி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள், பல ஆண்டுகளாக மயானத்திற்குச் செல்ல பாதை இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், புதுப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று வருவாய்த் துறையினர் அளவீடு செய்தனர்.
இதையறிந்த புதுப்பட்டு மக்கள், எங்கள் பகுதி மக்கள் வீடுகட்டி வசிக்க வழங்கப்பட்ட இடத்தில், சாலை அமைக்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வருவாய்த் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.