/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர்கோபுரவிளக்குகள் பழுது இருளில் புதுப்பட்டினம் அவதி
/
உயர்கோபுரவிளக்குகள் பழுது இருளில் புதுப்பட்டினம் அவதி
உயர்கோபுரவிளக்குகள் பழுது இருளில் புதுப்பட்டினம் அவதி
உயர்கோபுரவிளக்குகள் பழுது இருளில் புதுப்பட்டினம் அவதி
ADDED : நவ 03, 2024 12:29 AM

புதுப்பட்டினம்:புதுப்பட்டினத்தில் உயர்கோபுர விளக்குகள் ஒளிராததால், இருள் சூழ்ந்து அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இப்பகுதி முக்கிய வர்த்தக பகுதியாக விளங்குகிறது. அணுசக்தி துறையின் கல்பாக்கம், புதுப்பட்டினம், சுற்றுபுற பகுதியினர், அத்யாவசிப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும், இங்கு வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில், பல ஆண்டுகளாக, உயர்கோபுர விளக்குகள் ஒளிராமல், இருள் சூழ்ந்துள்ளது. இச்சாலையை முன்பு நிர்வகித்த, மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம், புதிய பால சாலை சந்திப்பு, விட்டிலாபுர சாலை சந்திப்பு, அரச மரத்தடி சந்திப்பு ஆகிய இடங்களில், உயர்கோபுரவிளக்கு அமைத்தது. இவ்விளக்குகள் நாளடைவில் பழுதடைந்தன.
தற்போது தேசிய நெடுஞ்சாலை, வேறிடத்தில் புதிய தடமாக அமைக்கப்படுகிறது. பழைய கிழக்கு கடற்கரை சாலை, எந்த நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் குழப்பம் நிலவுவதால், உயர்கோபுர விளக்குகளை எத்துறை பராமரிப்பது என்பதும் கேள்விக்குறியானது.
பிரதான வர்த்தக பகுதியில் உள்ள விளக்குகள் ஒளிராததால்க, பல ஆண்டுகளாக இருளில் மூழ்கி, விபத்து, கடைகளில் திருட்டு அதிகரிக்கிறது. இருசக்கர வாகன பயணியர், பாதசாரிகள் தடுமாறுகின்றனர்.
கூடுதல் மின்கட்டணம் கருதி, ஊராட்சி நிர்வாகமும் புறக்கணிக்கிறது.
விளக்குகளுக்கு, அணுசக்தி துறை சார்பில் இலவச மின் இணைப்பு பெற்று ஒளிரவைக்குமாறு, வணிகர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும், அரசுத் துறையினர் அலட்சியப்படுத்துகின்றனர்.
இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி, உயர்கோபுரவிளக்குகளை ஒளிரவைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.