ADDED : ஜன 03, 2024 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுப்பட்டினம்:கல்பாக்கம்அருகே உள்ள புதுப்பட்டி னத்திற்கு, சுற்றுப்புற பகுதியினர், அணுசக்தி வளாகம், நகரிய வேலைகளுக்கு செல்கின்றனர்.
நகரியத்துடன் ஊராட்சிப் பகுதியை இணைக்கும் புதிய பாலம் சாலை, குண்டும் குழியுமாக சீரழிந்தது. அதை, பாவினி அணுமின் நிறுவனம் கான்கிரீட் சாலையாக மேம்படுத்தியது.
இச்சாலையும், கான்கிரீட் பெயர்ந்து சீரழிந்தது. அதே நிறுவனம், கடந்த 2018ல் கான்கிரீட் சாலை மீது, தார்ச் சாலை அமைத்தது.
அதுவும், குண்டும் குழியுமாக சீரழிந்து, நகரியம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் அவதிக்குள்ளாகினர். புதிய சாலை அமைக்க வலியுறுத்திய நிலையில், அணுசக்தி துறை பொதுப்பணி சேவைகள் பிரிவு நிர்வாகம், நகரிய நுழைவாயில் துவங்கி, பழைய கிழக்கு கடற்கரை சாலை வரை, 200 மீ.,க்கு, தற்போது புதிய தார்ச் சாலை அமைத்துள்ளது.