/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பங்க்' ஊழியரிடம் அடாவடி த.வெ.க., தொண்டருக்கு வலை
/
'பங்க்' ஊழியரிடம் அடாவடி த.வெ.க., தொண்டருக்கு வலை
ADDED : பிப் 16, 2025 08:53 PM
பல்லாவரம்:பல்லாவரம் அருகே, திருநீர்மலை பிரதான சாலையில், 'இந்தியன் ஆயில்' பெட்ரோல் பங்க் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த, நடிகர் விஜயின் த.வெ.க., தொண்டரான இளங்கோ, 38, அந்த பங்க்கிற்கு, நேற்று முன்தினம் சென்றார்.
தன் 'ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு' பயன்படுத்தி 3,000 ரூபாய் எடுத்து தரும்படி, அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு, பணியில் இருந்த ரஞ்சித், 32, என்பவர், 'கணக்கு முடிக்கப்பட்டதால் பணம் எடுத்து தர முடியாது' என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, தகராறு செய்து, ஊழியர் ரஞ்சித்தை சரமாரியாக தாக்கினார்.
பங்க்கில் வந்து ஊழியரை தாக்கியது குறித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள இளங்கோவை தேடி வருகின்றனர்.

