/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
:பி.வி.களத்துார் இருளர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கல்
/
:பி.வி.களத்துார் இருளர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கல்
:பி.வி.களத்துார் இருளர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கல்
:பி.வி.களத்துார் இருளர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கல்
ADDED : மே 25, 2024 11:34 PM

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் பகுதியில், 11 இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைகள் செய்கின்றனர். இக்குடும்பங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள், ஒரு மாணவி, இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாத நிலையில், அரசின் முக்கிய சேவைகள், சலுகைகள் என பெற இயலவில்லை. இங்கு இயங்கும் சத்தியம் எஜுகேஷன் டிரஸ்ட், அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குமாறு, வருவாய்த் துறையிடம் முறையிட்டது.
இதுகுறித்து பரிசீலித்த வருவாய்த் துறையினர், நேரடி கள ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, சப் - கலெக்டர் நாராயண சர்மா, ஆன்லைன் சான்றிதழ் அளித்தார்.
இதை தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஜாதி சான்றிதழை பதிவிறக்கி, நேற்று பள்ளி தலைமையாசிரியருடன், அவர்களிடம் வழங்கினார்.