/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரி லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து
/
கல் குவாரி லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து
ADDED : அக் 16, 2025 01:07 AM

சித்தாமூர்: கொளத்துாரில் எம்-சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சித்தாமூர் அருகே நல்லாமூர் கிராமத்தில் ரோட்டுக்கடை பகுதியில் இருந்து கொளத்துார் செல்லும் தார் சாலை உள்ளது.
இது கொளத்துார், பெருவெளி, நல்லாமூர், கோட்டிவாக்கம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது.
சாலையில் பள்ளி குழந்தைகள், விவசாயிகள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என தினசரி ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.
கொளத்துார் பகுதியில் செயல்படும் கல் குவாரியில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு எம்-சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு அருகே இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை நிறுத்தி லாரியை மீட்டனர்.
இதுகுறித்து கொளத்துார் மக்கள் கூறியதாவது:
கொளத்துார் பகுதியில் தினசரி 500க்கும் மேற்பட்ட லாரிகள் பாரம் ஏற்றிச் செல்கின்றன.
தற்போது உள்ள சாலை 3.5 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது, இதனால் லாரிகள் பாரம் ஏற்றிக்கொண்டு வந்தால் எதிரே வரும் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். கல் குவாரி லாரிகள் அடிக்கடி மின்கம்பத்தின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
துறை சார்ந்த அதிகாரிகள் அதிக பாரங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.