/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூன்றாண்டாக மதிப்பெண் சான்றில்லை சென்னை பல்கலை மாணவர்கள் அவதி
/
மூன்றாண்டாக மதிப்பெண் சான்றில்லை சென்னை பல்கலை மாணவர்கள் அவதி
மூன்றாண்டாக மதிப்பெண் சான்றில்லை சென்னை பல்கலை மாணவர்கள் அவதி
மூன்றாண்டாக மதிப்பெண் சான்றில்லை சென்னை பல்கலை மாணவர்கள் அவதி
ADDED : அக் 16, 2025 01:25 AM
சென்னை: மூன்று ஆண்டுகளாக மதிப்பெண் சான்றிதழ் வழங்காததால், சென்னை பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவ - மாணவியர், உயர்கல்வியில் சேர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை பல்கலையின்கீழ் அரசு கல்லுாரிகள், உதவி பெறும் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள் என, 150க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உறுப்பு கல்லுாரிகளாக செயல்படுகின்றன.
அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகளைத் தவிர மற்ற கல்லுாரிகளுக்கான தேர்வுக்கட்டணத்தை பெற்று, தேர்வு நடத்தி, மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவதை, சென்னை பல்கலை வழக்கமாக செய்து வருகிறது.
ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஒவ்வொரு செமஸ்டர் முடிந்தபிறகும், பாட வாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண் சார்ந்த சான்றிதழை, சென்னை பல்கலை வழங்கவில்லை. அதற்குப்பதில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்தபின், பட்ட சான்றிதழை மட்டுமே வழங்குகிறது.
ஆனால், சென்னை பல்கலையில் சேர, மாணவர்கள், பாட வாரியான மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம் என்ற விதியை வகுத்துள்ளது.
இந்த முரண்பாடான விதியால், சென்னை பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில் ஏற்கனவே படித்த மாணவ - மாணவியரும் தற்போது படிக்கும் மாணவ - மாணவியரும், உயர்கல்வியிலோ, ஆராய்ச்சி படிப்புகளிலோ சேர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.