/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருங்களத்துாரில் இன்று வெறிநாய் தடுப்பூசி முகாம்
/
பெருங்களத்துாரில் இன்று வெறிநாய் தடுப்பூசி முகாம்
ADDED : செப் 27, 2024 07:52 PM
தாம்பரம்:செல்லப்பிராணிகள் வளர்ப்போர், அவர்களது நாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெறிநாய் தடுப்பூசி போடுவது கட்டாயம்.
இது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக வெறிநாய் தினமான இன்று, தாம்பரம் மாநகராட்சியில் முதற்கட்டமாக, 250 நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.
இரண்டாம் கட்டமாக, ஒவ்வொரு வார்டிலும், 200 நாய்கள் என, 70 வார்டுகளிலும், 14,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெருங்களத்துார் மண்டல அலுவலகம் பின்புறத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில், இன்று காலை 8:00 மணி முதல் மதியம் 11:00 மணி வரை நடக்கும் முகாமில், நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை ஆகியவை இணைந்து, இம்முகாமிற்கு திட்டமிட்டுள்ளது.