/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழை வெள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
மழை வெள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 01, 2024 12:30 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், தாம்பரம், பல்லாவரம், வண்டலுார், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில், தாழ்வான பகுதியிலிருந்த 487 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
முத்தமிழ் மன்றத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 295 பேருக்கு, உணவு மற்றும் போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத், கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தாம்பரம், குரோம்பேட்டை, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, மஹாலட்சுமி நகர் உள்ளிட்ட 84 வாசிப்பிட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, நெடுஞ்சாலை என, 133 இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்தன. அவற்றை, போலீசார், தீயணைப்புத்துறை அதிகாரிகள் அகற்றினர். 87 இடங்களில் மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

