/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூங்காவில் மழைநீர் தேங்கி விளையாட்டு உபகரணங்கள் நாசம்
/
பூங்காவில் மழைநீர் தேங்கி விளையாட்டு உபகரணங்கள் நாசம்
பூங்காவில் மழைநீர் தேங்கி விளையாட்டு உபகரணங்கள் நாசம்
பூங்காவில் மழைநீர் தேங்கி விளையாட்டு உபகரணங்கள் நாசம்
ADDED : அக் 26, 2025 10:22 PM

மறைமலை நகர்: பெரிய விஞ்சியம்பாக்கம் பூங்காவில், மழைநீர் தேங்கி விளையாட்டு உபகரணங்கள் வீணாகி வருவதால், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் திருத்தேரி, பாரேரி, பெரிய விஞ்சியம்பாக்கம், சின்ன விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு, 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர், இங்கு வந்து தங்கி மறைமலை நகர், ஒரகடம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
இதில், பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் ஊராட்சி சார்பில், பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி செய்ய நடைபாதை உள்ளிட்டவை இதில் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக, தற்போது பூங்கா முழுதும் தண்ணீர் தேங்கி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை வீணாகி வருகின்றன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பூங்காவில் இருந்து மழைநீர் வெளியேற, உரிய கால்வாய் வசதியில்லை. இதன் காரணமாக, விளையாட்டு உபகரணங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன், தேங்கும் தண்ணீரில் விஷ ஜந்துக்கள் திரிகின்றன.
பூங்கா வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால், குழந்தைகளுக்கு விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

