/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : அக் 26, 2025 10:25 PM

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் உள்ள துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது.
திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப் பணிகள் முடிவுற்ற நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக, கடந்த 24ம் தேதி, விநாயகர் வழிபாடுடன் விழா துவங்கியது. அன்று இரவு, முதற்கால வேள்வி பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் இரண்டாம் கால பூஜைகளும், இரவு மூன்றாம் கால பூஜைகளும் நடந்தன.
தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணியளவில், நான்காம் காலை பூஜைகள் நடந்த நிலையில், 9:30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது.
அதைத்தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. பின், மஹா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன் தலைமை வகித்தார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

