/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி அரசு பள்ளி முன் மழை நீர் தேக்கம்
/
புகார் பெட்டி அரசு பள்ளி முன் மழை நீர் தேக்கம்
ADDED : டிச 17, 2024 12:27 AM

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஓரத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நடைபெறுகிறது. இதில், பயன்பெறும் பள்ளி மாணவர்கள் பள்ளி அருகில், குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரில் நடந்து செல்கின்றனர். பள்ளி முன் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
பள்ளியின் அருகே உள்ள மழைநீர் வடிகால் வாயை ஆக்கிரமித்து, அதில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, மழை நீர் வடிகால்வாயை சீரமைத்து, பள்ளியின் முன் மழைநீர் தேங்காதவாறு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - ஓ. ஜி. தனஞ்செயன், அச்சரப்பாக்கம்.
தேங்கிய மழை நீரால்
கொசு தொல்லை
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட , அருள்நகர் டாக்டர் அப்துல் கலாம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு, மத்தியில் உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு தொல்லை, தொற்றுநோய் பரவும் அபாயம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை நிலவி வருகிறது. பிளீச்சிங் பவுடர் தெளித்து, சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு நகராட்சி சார்பில் கொசு மருந்து அடித்து சீரமைக்க வேண்டும்.
-க. குமரன், கூடுவாஞ்சேரி.
குடியிருப்பு பகுதியில்
குப்பை தேக்கம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி எம்.ஜி.நகர்., விரிவு பகுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு மேலாக,சாலை ஓரம் குப்பை தேங்கி உள்ளது. இங்கு ஊராட்சி சார்பில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை.
தேங்கியுள்ள குப்பையை ஆடு மாடுகள் மேய்ந்து, குப்பைகளை சாலையில் இழுத்து போடுவதால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றனர். மேலும் கொசுத்தொல்லை, துர்நாற்றம் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது .
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும். இதுவரைகுப்பைகளை அகற்றவில்லை. மாவட்ட நிர்வாகம் குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். முரளிதரன், ஊரப்பாக்கம்.
பயன்பாடு இல்லாத
குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?
பவுஞ்சூர் அடுத்த நெற்குணப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சி மன்ற கட்டடம் அருகே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டி,
சேதமடைந்து பயன்பாடு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் விபத்து ஏற்படுவதற்கு முன் சேதமடைந்த மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு.பாபு, கூவத்துார்.