/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்பில் தேங்கும் மழைநீர் சின்னகளக்காடியில் தீராத பிரச்னை
/
குடியிருப்பில் தேங்கும் மழைநீர் சின்னகளக்காடியில் தீராத பிரச்னை
குடியிருப்பில் தேங்கும் மழைநீர் சின்னகளக்காடியில் தீராத பிரச்னை
குடியிருப்பில் தேங்கும் மழைநீர் சின்னகளக்காடியில் தீராத பிரச்னை
ADDED : டிச 22, 2024 08:27 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சியில், சின்னகளக்காடி கிராமம் உள்ளது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வேலுார் ஏரியில் இருந்து சின்னகளக்காடி ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், புதர் மூடியுள்ளது.கால்வாயை சீரமைக்க வேண்டி பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பதால், உடைந்துள்ள கரைகள் வழியாக தண்ணீர் வெளியேறி, குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி, கிராமவாசிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சின்னகளக்காடி ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.