/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய் பணி மதுராந்தகத்தில் தீவிரம்
/
மழைநீர் கால்வாய் பணி மதுராந்தகத்தில் தீவிரம்
ADDED : ஜூலை 13, 2025 12:17 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மதுராந்தகம் நகராட்சி 24வது வார்டு, மதுராந்தகம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காந்திநகர் பகுதிக்கு செல்லும் சாலை ஓரம், 20 ஆண்டுகளுக்கு முன், கருங்கற்களால் கால்வாய் அமைக்கப்பட்டது.
நாளடைவில் சேதமாகி, கருங்கற்கள் பெயர்ந்து, துார்ந்து வந்ததால், ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில், தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது.
அதை தவிர்க்கும் விதமாக, அப்பகுதியில் இருந்து தண்ணீர் விரைந்து வெளியேறும் வகையில், மதுராந்தகம் நகராட்சி பொது நிதி வாயிலாக 2025 - - 26ம் நிதியாண்டில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறிய கல்வெட்டுடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஒரு சில தினங்களில் பணி முடிவு பெறும். மழைக் காலங்களில் இப்பகுதியில் இருந்து நீர் விரைவாக வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.