ADDED : டிச 03, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல், கனமழை காரணமாக, வருவாய் கல்வி மாவட்டத்தில் பள்ளிகளில் இருந்த மரங்கள் விழுந்தன. பள்ளி வளாகங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதை சீரமைக்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் பெருங்களத்துார், அனகாபுத்துார், சூணாம்பேடு ஆகிய பகுதியில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருக்கழுக்குன்றம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, மணமை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள்.
புதுப்பட்டு, வெள்ளங்கொண்டகரம், கழிப்பட்டூர், முகையூர், பெருந்துறவு, சித்தாமூர் ஆகிய பகுதிகளில் உள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட 36 பள்ளிகளில் மழைநீர் தேங்கியதுடன், மரங்களும் விழுந்தன.
இதை அகற்றும் பணியில், கல்வித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.