/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி பேரூராட்சி பகுதியில் மீண்டும் மழைநீர் வடிகால்வாய் பணி
/
கருங்குழி பேரூராட்சி பகுதியில் மீண்டும் மழைநீர் வடிகால்வாய் பணி
கருங்குழி பேரூராட்சி பகுதியில் மீண்டும் மழைநீர் வடிகால்வாய் பணி
கருங்குழி பேரூராட்சி பகுதியில் மீண்டும் மழைநீர் வடிகால்வாய் பணி
ADDED : டிச 08, 2024 02:00 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது.
இதில், பேரூராட்சி பகுதியில், போதுமான அளவிற்கு மழைநீர் வடிகால்வாய் இன்றி இருந்ததால், மழைக்காலங்களில் வெள்ள நீர் விரைந்து வடியாமல் தேங்கி நின்றன.
இதனால், பேரூராட்சி பகுதிகளில், தேவையான இடங்களில், மழை நீர் வடிகால்வாய் அமைக்க பகுதி குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.30 கோடி ரூபாய் மதிப்பில், 4 கி.மீ., நீளத்திற்கு, பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதிகளிலும், மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வந்ததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தற்போது, மீண்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதில், ஆறாவது வார்டுக்கு உட்பட்ட, சிவன் கோவில் தெரு பகுதியில், 175 மீட்டர் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுவரை, 1, 000 மீட்டர் நீளத்திற்கு, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன, என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.