/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதர் சூழ்ந்த உபரிநீர் கால்வாய் வயல்களில் தேங்கும் மழைநீர்
/
புதர் சூழ்ந்த உபரிநீர் கால்வாய் வயல்களில் தேங்கும் மழைநீர்
புதர் சூழ்ந்த உபரிநீர் கால்வாய் வயல்களில் தேங்கும் மழைநீர்
புதர் சூழ்ந்த உபரிநீர் கால்வாய் வயல்களில் தேங்கும் மழைநீர்
ADDED : நவ 27, 2024 11:57 PM

செய்யூர்:செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில், 10 கி.மீ., நீளம் உடைய, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரி உபரிநீர் கால்வாய் உள்ளது.
செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விளாங்காடு, போந்துார், வயலுார், கல்பட்டு, தென்னேரிப்பட்டு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், இந்த கால்வாய் வழியாக, ஓதியூர் ஏரியில் கலந்து, பின் வங்கக் கடலில் கலக்கிறது.
இந்த கால்வாய், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து கால்வாயாகவும் உள்ளது. வெடால் பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாயில் புதர் மண்டி, கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் விவசாய நிலத்தில் புகுந்து, பயிர்களை நாசம் செய்கிறது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் கூறியதாவது:
வெடால் மற்றும் கடுக்கலுார் கிராமத்திற்கு இடையே செல்லும் உபரிநீர் கால்வாயில் புதர்மண்டி, கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி, ஆண்டுதோறும் 80க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பல முறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்கிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.