/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை திரையரங்கில் அரிய வகை ஆந்தை மீட்பு
/
செங்கை திரையரங்கில் அரிய வகை ஆந்தை மீட்பு
ADDED : மே 21, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு நகர பகுதியில், பழைய ஜி.எஸ்.டி., சாலையில், லதா திரையரங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த திரையரங்கில் நேற்று காலை, அரிய வகை வெள்ளை நிற ஆந்தை ஒன்று புகுந்ததாக, திரையரங்க ஊழியர்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி ஆந்தையை உயிருடன் பிடித்தனர்.
அதன் பின் தீயணைப்பு வீரர்கள், அந்த அரிய வகை ஆந்தையை, செங்கல்பட்டு வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.