ADDED : ஜன 08, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி 17வது வார்டு கீழக்கரணை பகுதியில், மழைநீர் வடிகால்வாய் ஓரம் நேற்று மாலை, அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று சென்றுள்ளது.
இதை, அப்பகுதி இளைஞர்கள் சில பார்த்துள்ளனர்.
உடனே, அந்த ஆமையை பத்திரமாக மீட்ட இளைஞர்கள், அதே பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களின் உதவியுடன், வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

