sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நரசிம்ம பெருமாள் கோவிலில் ரத ஸப்தமி

/

நரசிம்ம பெருமாள் கோவிலில் ரத ஸப்தமி

நரசிம்ம பெருமாள் கோவிலில் ரத ஸப்தமி

நரசிம்ம பெருமாள் கோவிலில் ரத ஸப்தமி


ADDED : பிப் 05, 2025 12:40 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இக்கோவிலில் , ரத ஸப்தமி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

காலை 7:00 மணிக்கு உற்சவர் பிரகலாத வரதர் வஜ்ரங்கி சேவையில் சூரிய பிரபை வாகனத்திலும், 8:00 மணிக்கு கருட வாகனத்திலும், 10:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி, மங்கல வாத்தியம் முழங்க நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.

மாலை 4:30 மணிக்கு புண்ய கோடி விமானத்திலும், 6:00 மணிக்கு சேஷ வாகனத்திலும், இரவு 8:30 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில், சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us