/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆறு தாலுகாவில் நாளை ரேஷன் கார்டு திருத்த முகாம்
/
ஆறு தாலுகாவில் நாளை ரேஷன் கார்டு திருத்த முகாம்
ADDED : ஜன 24, 2025 12:47 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, நாளை 25ம் தேதி, சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஆறு தாலுகாக்களில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவுபோன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடக்கிறது.
கீழ்கண்ட கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

