ADDED : பிப் 08, 2025 07:49 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே அனந்தமங்கலம் ஊராட்சியில் நேற்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல், புதிய அட்டை பதிவு செய்தல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம் போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
அதில் நேற்று, மதுராந்தகம் தாலுகாவில் அனந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், அட்டை புதுப்பித்தல், புகைப்படம் பதிவேற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட 39 மனுக்கள் பெறப்பட்டன.
அனந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.