UPDATED : அக் 09, 2026 10:00 PM
ADDED : அக் 09, 2026 07:28 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஐந்து தாலுகாக்களில், ரேஷன் கார்டு சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஆறு தாலுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, மறைமலை நகர், பரமன்கேனி, பூஞ்சேரி, கோவளம் ஆகிய பகுதிகளில் இயங்கும் ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் ரேஷன் கார்டுதாரர்கள் திருத்தங்கள் செ ய்து கொள்ளலாம். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், பதிவு செய்யலாம். இடைத்தேர்தல் காரணமாக மதுராந்தகம் பகுதியில் சிறப்பு முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
