ADDED : நவ 10, 2024 07:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:வந்தவாசி- - காஞ்சிபுரம் சாலையில், மானாம்பதி வாகன சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, பெருநகர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் வாகனத்தில், 1,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. கடத்தல் அரிசி, வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 'டாடா ஏஸ்' வாகன டிரைவர் மருதாடு கிராமத்தைச் சேர்ந்த விமல், 34, என்பவரை, பெருநகர் போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், 1,000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஓட்டனநரை பெருநகர் போலீசார், காஞ்சிபுரம் குடிமையியல் குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.