/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடை கட்டடம் மருவளம் கிராமத்தில் திறப்பு
/
ரேஷன் கடை கட்டடம் மருவளம் கிராமத்தில் திறப்பு
ADDED : செப் 27, 2025 01:44 AM

சித்தாமூர்:மருவளம் கிராமத்தில், 9.40 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.
சித்தாமூர் அருகே ஜமீன் எண்டத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட மருவளம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், கிராமத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள், அருகே உள்ள ஒழவெட்டி கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தனர். இதில், சிரமம் ஏற்பட்டதால், மருவளம் கிராமத்தில் ரேஷன் கடை துவக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், 2023 - 24ம் ஆண்டு, மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 9.4 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம், நேற்று திறந்து வைத்தார்.