/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடை காலி பணியிடங்கள் செங்கையில் விண்ணப்பம் வரவேற்பு
/
ரேஷன் கடை காலி பணியிடங்கள் செங்கையில் விண்ணப்பம் வரவேற்பு
ரேஷன் கடை காலி பணியிடங்கள் செங்கையில் விண்ணப்பம் வரவேற்பு
ரேஷன் கடை காலி பணியிடங்கள் செங்கையில் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : அக் 11, 2024 12:01 AM
மாமல்லபுரம்:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுனர் ஆகிய காலி பணியிடங்களில் ஊழியர்கள் நியமிக்க, இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் இயங்குகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில், 97 விற்பனையாளர் பணியிடங்கள், 87 பொட்டலம் கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 35 விற்பனையாளர் பணியிடம், 16 கட்டுனர் பணியிடம் ஆகியவை காலியாக உள்ளன. இப்பணியிடங்களில், நேரடி நியமனம் வாயிலாக ஊழியர்கள் நியமிக்க, அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் முடிவெடுத்துள்ளது.
குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, இணையம் வாயிலாக விண்ணப்பித்தல் உள்ளிட்டவை குறித்து, அந்தந்த மாவட்ட நிலைய இணையதளத்தில் அறியலாம்.
அதே இணையதளம் வாயிலாக, நவ., 7ம் தேதி மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், நிலையங்கள் அறிவித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்ட இணையதள முகவரி: https://www.drbcgl.in மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள முகவரி: https://www.drbkpm.in ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.