/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 07, 2025 10:38 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது.
மாநில துணைத்தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.
ப்ளூடூத் எடை மெஷினுடன் இணைப்பு எடை போடுவதால் காலதாமதம் ஆகுவதால் விற்பனையாளருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்படுவதால், இதை கைவிட வேண்டும்.
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள கண் கருவிழி வாயிலாக ரேகை பதிவதால் சிலருக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டுவரப்படும் அரிசி, சர்க்கரை போன்றவை எடை குறைவாக அனுப்பப்படுவதால், விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் தயாளன், செயலர் லோகியா, பொருளாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.