/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்
/
ரேஷன் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்
ADDED : மார் 25, 2025 07:43 AM
செய்யூர் : தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை மற்றும் 'பேட்ஜ்' அணிந்து, அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு நியாய விலை கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை பாக்கெட் செய்து விற்பனை செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, எடை இயந்திரத்தை 'பி.ஓ.எஸ்., மிஷின்' உடன் இணைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 350 ரேஷன் கடை பணியாளர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து, நியாய விலைக் கடைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.