/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூரில் நுாலகம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை
/
பவுஞ்சூரில் நுாலகம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை
ADDED : செப் 16, 2025 10:48 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் பகுதியில், மேம்படுத்தப்பட்ட நுாலகம் அமைக்க வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லத்துார் ஒன்றியம், பவுஞ்சூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், பொதுப்பணித்துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பஜார் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
திருவாதுார், பச்சம்பாக்கம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்குச் செல்ல பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் நுாற்றுக்கணக்கானோர், பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் நுாலக வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பட்டதாரிகள், முதியவர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் சிரமப்படுகின்றனர்.
எனவே, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், மேம்படுத்தப்பட்ட நுாலகம் அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.