/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நுாலகம் அருகே பழுதான ஜெனரேட்டர் அப்புறப்படுத்த வாசகர்கள் கோரிக்கை
/
நுாலகம் அருகே பழுதான ஜெனரேட்டர் அப்புறப்படுத்த வாசகர்கள் கோரிக்கை
நுாலகம் அருகே பழுதான ஜெனரேட்டர் அப்புறப்படுத்த வாசகர்கள் கோரிக்கை
நுாலகம் அருகே பழுதான ஜெனரேட்டர் அப்புறப்படுத்த வாசகர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2025 11:33 PM

கூடுவாஞ்சேரி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரியில், நுாலகம் அருகே உள்ள பழுதடைந்த, 'ஜெனரேட்டர்' இயந்திரத்தை அப்புறப்படுத்த வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலை, கம்பர் தெருவில், நுாலகம் செயல்பட்டு வருகிறது.
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் இயங்கி வரும் இந்நுாலகத்திற்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர்.
நுாலகத்தின் பிரதான வாயில் அருகே, கடந்த நான்கு ஆண்டுகளாக, செயல்படாத மிகப் பெரிய 'ஜெனரேட்டர்' ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெனரேட்டர் மறைவிடமாக உள்ளதால், சமூக விரோதிகள் இதன் மறைவில் மது அருந்தி வருகின்றனர். தவிர, இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும், இந்த மறைவிடம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், நுாலகம் முழுதும் துர்நாற்றம் வீசுவதால், வாசகர்கள் அவதிப் படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த ஜெனரேட்டரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.