/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க பரிந்துரை
/
செங்கை அரசு மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க பரிந்துரை
செங்கை அரசு மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க பரிந்துரை
செங்கை அரசு மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க பரிந்துரை
ADDED : ஜூன் 28, 2025 10:18 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பு நலன்கருதி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 1965ம் ஆண்டு, துவக்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக 480 ஏக்கர் நிலம் உள்ளது.
இதில், அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் தங்கும் விடுதியில், மருத்துவ மாணவர்கள் 400 பேரும், முதுநிலை மாணவர்கள் 350 பேர் என, மொத்தம் 750 மாணவர்களும் தங்கி படிக்கின்றனர்.
இதே வளாகத்தில், செவிலியர் கல்லுாரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன், கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைத்தனர்.
இதில், மருத்துவக்கல்லுாரியை சுற்றியுள்ள சுற்றுச்சுவரை, ஆங்காங்கே, சமூக விரோத கும்பல் உடைத்து, மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகிறது.
'குடி'மகன்கள் போதை தலைக்கு ஏறியதும், பாட்டில்களை போட்டு உடைத்து விடுகின்றனர்.
இப்பகுதி, சமூக விரோத கும்பல்களின், புகலிடமாக மாறிவருகிறது. இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதனால், மாணவர்கள் விளையாட பாதுகாப்பு இல்லாததால், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி மற்றும் தனியார் இடங்களில் விளையாடி வருகின்றனர்.
இதை தவிர்க்க, மருத்துவக்கல்லுாரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க, மருத்துவக்கல்லுாரி இயக்குநர் மற்றும் கலெக்டர் ஆகியோருக்கு, மருத்துவமனை நிர்வாகம் கருத்துரு அனுப்பி உள்ளது.
இதன்மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் நலன்கருதி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கும், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைக்க, 2 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன், சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.