/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆஸ்திரேலிய ஆந்தை கீழ்ப்பாக்கத்தில் மீட்பு
/
ஆஸ்திரேலிய ஆந்தை கீழ்ப்பாக்கத்தில் மீட்பு
ADDED : பிப் 15, 2025 12:41 AM

கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம், புல்லாபுரம், இரண்டாவது தெருவில் வசிப்பவர் ராஜா, 40. இவர், நேற்று காலை, 6:30 மணிக்கு வீட்டின் வெளியில் வந்து பார்த்தபோது, அரிய வகை ஆந்தை வாசலில் இருந்துள்ளது.
அதை துரத்த முயன்ற போது, வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. ராஜா உடனடியாக, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, காலை 7:00 மணிக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான வீரர்கள், ஆந்தையை பிடித்தனர்.
சோதனையில், அரிய வகையான ஆஸ்திரேலியா ஆந்தை என்பதும், பகலில் பாதை தெரியாமல், வழிமாறி வந்திருக்கலாம் என்பதும் தெரிந்தது. ஆந்தையை, வனத்துறையிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

