/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழில் பழகுனர் பயிற்சி 21ல் ஆள் சேர்ப்பு முகாம்
/
தொழில் பழகுனர் பயிற்சி 21ல் ஆள் சேர்ப்பு முகாம்
ADDED : பிப் 16, 2024 12:09 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் பழகுனர் பயிற்சிக்கு ஆள் சேர்க்கும் முகாம், வரும் 21ம் தேதி நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவின் கீழ், தொழில் பழகுனர் பயிற்சிக்கு ஆள் சேர்க்கை முகாம், வரும் 21ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடக்கிறது.
இம்முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், 1,500க்கும் மேற்பட்ட இடங்களை பூர்த்தி செய்ய உள்ளனர்.
இதில், பட்டப்படிப்பு, டிப்ளமா, அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயின்ற பயிற்சியாளர்கள், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 கல்வி தகுதியுடைய மாணவ - மாணவியர் நேரடியாக பங்கேற்கலாம்.
இரண்டு ஆண்டுகள் வரை தொழில் பழகுனர் பயிற்சி பெற்று, மத்திய அரசின் என்.ஏ.சி., சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகையாக 8,000 ரூபாய் முதல் 16,000 ரூபாய் வரை, மத்திய, மாநில, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளில் இருந்து வழங்கப்படுகிறது.
என்.ஏ.சி., சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.