/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து வட்டார வளர்ச்சி நிர்வாகம் எச்சரிக்கை
/
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து வட்டார வளர்ச்சி நிர்வாகம் எச்சரிக்கை
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து வட்டார வளர்ச்சி நிர்வாகம் எச்சரிக்கை
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து வட்டார வளர்ச்சி நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : டிச 12, 2025 05:59 AM
புதுப்பட்டினம்: சாலைகளில் உலவும் மாடுகள் பிடிக்கப்பட்டு, கால்நடை பட்டியில் அடைக்கப்படும் என, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருக்கழுக்குன்றம் வட்டார பகுதியில், மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலை, சதுரங்கப்பட்டினம் - திருத்தணி சாலை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் கடக்கின்றன.
இப்பகுதியில் மாடு வளர்ப்போர், மாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் மேய்ச்சலுக்கு அனுப்பாமல், சாலைகளில் உலவ விடுகின்றனர். அவை மேய்ச்சலுக்குப் பின், இருப்பிடம் திரும்புவதில்லை.
உரிமையாளர்களும், மாடுகளை பிடித்துச் சென்று கட்டி வைப்பதில்லை.
இதனால், மாடுகள் பிரதான சாலையில் கும்பலாக உலவி, ஒன்றுடன் ஒன்று சண்டையிடுகின்றன. சாலையில் குறுக்கிட்டு விபத்துகள் நடக்க காரணமாகின்றன.
அத்துடன், சாலையிலேயே படுத்து ஓய்வெடுக்கின்றன. வாகனங்கள் அவற்றின் மீது மோதி, அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சாலையில் உலவும் மாடுகளை பிடித்து, கால்நடை பட்டியில் அடைப்பதாக, வட்டார வளர்ச்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் கூறியதாவது:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில், மாடுகளை வெளியில் விடக்கூடாது என எச்சரித்த பிறகும், மாடுகள் சாலையில் தான் திரிந்து கொண்டிருந்தன.
ஊராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து மாடுகளைப் பிடித்து, ஐந்து மாடுகளை கொண்டமங்கலம் பட்டிக்கு அனுப்பினோம்.
மற்ற மாடுகளின் உரிமையாளர்களை, 'மாடுகளை வெளியில் விடக்கூடாது' என எச்சரித்துள்ளோம்.
வெங்கப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளிலும் மாடு உரிமையாளர்களை எச்சரித்து, சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

