/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்
ADDED : டிச 12, 2025 05:59 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள், மறைமலை நகரில் நேற்று துவங்கின.
தமிழகத்தில், வரும் ஏப்., மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள், நேற்று துவங்கின.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சியில், கடந்த லோக்சபா தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், கலெக்டர் சினேகா திறந்தார்.
அதன் பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி குறித்து, அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் தெரிவித்தார்.
இப்பணிகள், வரும் ஜன., 8ம் தேதி வரை நடைபெறும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், தாசில்தார்கள் சிவசங்கரன், செல்வசீலன் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த மதுராந்தகம் நகர செயலர் குமார், மறைமலை நகர் நகர செயலர் சண்முகம், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு விநாயகம் உள்ளிட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகளில், பெங்களூரு பெல் நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, நகராட்சி அலுவலக பகுதியில், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

