/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு இரண்டாக பிரிப்பு இல்லீடு ஊராட்சி உருவாக்கம்
/
சூணாம்பேடு இரண்டாக பிரிப்பு இல்லீடு ஊராட்சி உருவாக்கம்
சூணாம்பேடு இரண்டாக பிரிப்பு இல்லீடு ஊராட்சி உருவாக்கம்
சூணாம்பேடு இரண்டாக பிரிப்பு இல்லீடு ஊராட்சி உருவாக்கம்
ADDED : டிச 12, 2025 06:00 AM
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு கிராம ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு, இல்லீடு கிராம ஊராட்சி புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளின் எல்லைகள் மறுவரையறை பணிகள் நடந்து வருகின்றன. இதன் அடிப்படையில் புதிய கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஊரக வளர்ச்சி துறை பிறப்பித்த உத்தரவு:
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூணாம்பேடு கிராம ஊராட்சியில், 22 கிராமங்கள் இருந்தன. இதன் எல்லையை மக்கள் தொகைக்கு ஏற்ப மறுவரையறை செய்ததன் அடிப்படையில், 11 கிராமங்கள் தனியாக பிரிக்கப்பட்டு, இல்லீடு கிராம ஊராட்சி புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன்படி இல்லீடு கிராமம், இல்லீடு காலனி, மணப்பாக்கம் கிராமம், மணப்பாக்கம் காலனி, புதுக்குடி, புதுப்பட்டு கிராமம், புதுப்பட்டு காலனி, வெள்ளகொண்டகரம், புதுப்பேட்டை, காவனுார் கிராமம், காவனுார் காலனி ஆகிய குக்கிராமங்கள் இல்லீடு கிராம ஊராட்சியில் சேர்க்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

