/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்
/
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்
ADDED : ஜூலை 07, 2025 11:36 PM

சித்தாமூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இருந்த, பழுதடைந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம், குழந்தைகள் நல அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்த வளாகத்தில், பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சேமிப்பு கிடங்கு கட்டடங்கள் பழுதடைந்து இருந்தன.
இந்த கட்டடங்கள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறியதால், அப்பகுதியில் செயல்படும் மாணவியர் விடுதியில் தங்கியுள்ள மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பழுதடைந்த இந்த கட்டடங்களை இடித்து அகற்றினர்.