/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆர்., சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
ஓ.எம்.ஆர்., சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஓ.எம்.ஆர்., சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஓ.எம்.ஆர்., சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மார் 19, 2025 12:40 AM

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., சாலையில், நாவலுார் முதல் சிறுசேரி சிக்னல் வரை, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த, 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம், ஓ.எம்.ஆர்., சாலையில் நாவலுார், ஏகாட்டூர், சிறுசேரி சிப்காட் பகுதிகளில் ஐ.டி., நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. வழக்கமாகவே, இப்பகுதி ஓ.எம்.ஆர்., சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
தற்போது மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால், இச்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
மேலும், அணுகு சாலை ஓரத்தில், 3 கி.மீ., துாரத்திற்கு, ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்த கடைகளை அகற்ற, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று நாவலுார் முதல் சிறுசேரி சிக்னல் வரை, 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
மீதமுள்ள கடைகள் படிப்படியாக அகற்றப்படும் எனவும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீசார் கூறினர்.