/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பலவீனமாக இருந்த டவர் கல்பாக்கத்தில் அகற்றம்
/
பலவீனமாக இருந்த டவர் கல்பாக்கத்தில் அகற்றம்
ADDED : நவ 14, 2024 09:39 PM
கல்பாக்கம்:அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரிய பகுதியில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியினர், தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதையடுத்து, வெளிநபர்கள் குறித்த கண்காணிப்பிற்காக, நகரிய முக்கிய இடங்களில், சிசிடிவி கேமராக்கள் செயல்படுகின்றன. சென்னை அணுமின் நிலைய பேருந்து நிலைய வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இரும்பு டவரில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.
தற்போது, இரும்பு டவர் பலவீனமடைந்த நிலையில் இருந்தது. சூறாவளி காற்றில் டவர் சரிந்து சாலையில் விழுந்தால், அவ்வழியே செல்லும் நகரிய பகுதியினர், புதுப்பட்டினம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவியர் ஆகியோருக்கு ஆபத்து ஏற்படும்.
இதை தவிர்க்க, பலவீனமாக இருந்த டவர், நேற்று அகற்றப்பட்டது.