/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழைய பேனரை அகற்றி புது பேனர் ஜி.எஸ்.டி., சாலையில் அடாவடி
/
பழைய பேனரை அகற்றி புது பேனர் ஜி.எஸ்.டி., சாலையில் அடாவடி
பழைய பேனரை அகற்றி புது பேனர் ஜி.எஸ்.டி., சாலையில் அடாவடி
பழைய பேனரை அகற்றி புது பேனர் ஜி.எஸ்.டி., சாலையில் அடாவடி
ADDED : மே 30, 2025 11:13 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு முதல் வண்டலுார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலை ஓரமாக, 200க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த விளம்பர பேனர்களால் கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்களில் மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடக்கிறது.
தவிர, பெரும் விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பதும் மாதம்தோறும் நடக்கிறது.
காற்று பலமாக வீசும் போதும், உறுதித் தன்மை இழக்கும் போதும், இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து கீழே விழ அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இந்த ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் தொடர் செய்திகள் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், நம் நாளிதழ் செய்தியில் வெளியான பேனரை மட்டும், அதிகாரிகள் அகற்றினர்.
இந்நிலையில், அதே இடத்தில் மீண்டும் புதிதாக, ராட்சத பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., சாலையில் தற்போதும், 200க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன.
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த ராட்சத விளம்பர பேனர்கள் அனைத்தையும் அகற்ற காவல் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.