/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளிகளில் சுகாதார குழு அமைத்து ரெங்கா மருத்துவமனை விழிப்புணர்வு
/
பள்ளிகளில் சுகாதார குழு அமைத்து ரெங்கா மருத்துவமனை விழிப்புணர்வு
பள்ளிகளில் சுகாதார குழு அமைத்து ரெங்கா மருத்துவமனை விழிப்புணர்வு
பள்ளிகளில் சுகாதார குழு அமைத்து ரெங்கா மருத்துவமனை விழிப்புணர்வு
ADDED : நவ 18, 2024 03:38 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரெங்கா மருத்துவமனை சார்பில், உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம், கடந்த 15ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் பிச்சுமணி, டாக்டர் அனுராதா பிச்சுமணி ஆகியோர் தலைமையில், உலக சர்க்கரை நோய் தின சிறப்பு மலரை, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட, முக்கிய பிரமுர்கள் பெற்றுக்கொண்டனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சுகாதார குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாமை, 2028ம் ஆண்டு வரை நடத்தும் திட்டத்தை, முதன்மை கல்வி அலுவலர் கற்கபம் துவக்கி வைத்தார்.
மேலும், அரசு பள்ளிகளில் சுகாதார குழுக்கள் அமைத்து, ஆரோக்கிய செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொண்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, சான்றிதழ், கேடயங்கங்களை கலெக்டர் வழங்கினார்.
அதன்பின், சர்க்கரை நோய் குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ், பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
சர்க்கரை நோய் கண்காட்சி, பொம்மலாட்டம் நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இலவச யோகா பயிற்சியும் நடந்தது. இதில், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தீர்த்தலிங்கம், அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் வித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.