/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.2.22 கோடி மதிப்பில் 8 பூங்காக்கள் சீரமைப்பு
/
ரூ.2.22 கோடி மதிப்பில் 8 பூங்காக்கள் சீரமைப்பு
ADDED : ஏப் 28, 2025 01:10 AM

பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில், 20க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன.
இதனால், முதியோர் நடைபயிற்சி செல்ல முடியாமலும், சிறுவர்கள் விளையாட முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
மற்றொரு புறம், லேசான மழை பெய்தாலே ஒவ்வொரு பூங்காவிலும், வெள்ளம் தேங்கி குட்டையாக மாறி விடுகிறது.
அதனால், பூங்காக்களை மேடாக்கி புனரமைத்து, பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சுபம் நகர், அசோகா, காமாட்சி நகர், பவானி நகர், காசி விசாலாட்சிபுரம், அருள் முருகன் நகர் பூங்காக்களை, 2.22 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நடைபாதை, மின் விளக்கு, சிறுவர் விளையாட்டு திடல், பூச்செடி, இருக்கை உள்ளிட்ட வசதிகள் அமைகின்றன.
அசோகா பூங்காவில் 'டர்ப்' எனப்படும், பச்சை விளையாட்டு திடல் அமைக்கப்படுகிறது. இதில், கால்பந்து, கிரிக்கெட் விளையாடலாம். இதன் வாயிலாக, இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

