/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்பணி விறுவிறு
/
செங்கை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்பணி விறுவிறு
ADDED : ஏப் 01, 2025 12:27 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில் திருப்பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், புகழ்பெற்ற காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
ஹந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், இக்கோவில் உள்ளது.
இக்கோவிக்கு சொந்தமான நிலம், ராஜாஜி தெரு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ளது. இங்கு, தனியார் கடைகள் கட்டி, கோவிலுக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். ஆனால், கோவிலுக்கு முறையாக வாடகை பணம் செலுத்துவதில்லை.
கடந்த 2013ம் ஆண்டு, கும்பாபிஷேக விழா நடந்தது.
அதன் பின், கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் முடிவு செய்து, கோவில் திருப்பணி 2023, ஜூலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இங்கு, வசந்த மண்டபங்கள் கற்களால் கட்டப்பட்டு வருகின்றன.
கோவிலின் கிழக்கு பகுதியில், நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருபணிகளுக்கு, விருப்பம் உள்ளவர்கள் உதவலாம் என, கோவில் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.