/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பத்தில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
/
நெல்லிக்குப்பத்தில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
நெல்லிக்குப்பத்தில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
நெல்லிக்குப்பத்தில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
ADDED : ஜூலை 15, 2025 12:10 AM
திருப்போரூர், நெல்லிக்குப்பத்தில் உடைந்த குடிநீர் குழாய், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பளவு உடையது.
மாவட்டத்திலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான இது, 287.94 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
இந்த ஏரி நீரை பயன்படுத்தி நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, கீழூர், மேலையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.
மேலும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக, திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளுக்கு, கொண்டங்கி ஏரியில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
அந்த வகையில், திருப்போரூர் பேரூராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய், நெல்லிக்குப்பம் அருகே உடைந்து, கடந்த ஆறு மாதங்களாக சாலையில் குடிநீர் வழிந்தோடி வீணானது.
இது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.